CSNHA -Project Report 2020

 

உலருணவு வழங்கும் நடவடிக்கை :

COVID 19 காரணமாக வடபகுதியில் வருமானம் இழந்த, நாளாந்தம் கூலித் தொழில் செய்யும்

392 குடும்பங்களுக்கு மொத்தமாக € 5959.00 பெறுமதியான உலருணவு வழங்கும்

நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்திற்கு நெதர்லாந்தில் வசிக்கும் தமிழ்

கொடையாளர்கள், Lellystad தமிழ் பள்ளியின் பெற்றோர்கள், Wildeganzen அமைப்பு மற்றும்

ஆம்ஸ்டர்டாம் டைனமிக் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் ஆகியோர் இதற்கான நிதிப்

பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.

இத்திட்டத்திற்கான நிதி பங்களிப்பு விபரம் வருமாறு

Lelly stad tamil school € 675,00 Go Fund Me € 1413,50 CSNHA € 938,50 Wilde Gansen

€ 2177.00 Amsterdam Dynamic club € 500.00 மொத்தம் € 5959.00

விவசாய திட்டம்:

உலர் நிவாரணப் பணியை தொடர்ந்து மக்களின் உணவுத்தேவையை சீர் செய்யும் நோக்குடன்

காணி இருந்தும் பயிர்செய்கை மேற்கொள்ள பொருளாதார வசதியின்றி இருக்கும் வறிய

குடும்பத்தினரை இனம் கண்டு அவர்களுக்கான உதவிகளை வழங்கி அவர்களை

பயிர்செய்கையில் ஈடுபடுத்தல். இந்தவகையில் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்ட்ங்களில்

100 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு உதவித்திட்டம் வழங்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட4 கிராமங்களும் . கிளிநொச்சி

மாவட்த்தில் கரைச்சி , கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட6 கிராமங்களும்

தேர்வு செய்யப்பட்டடு, முதலாம் கட்டமாக 100அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

இத்திட்டமானது சுழற்சி முறை திட்டமாக அமைவதால், மேலும் 27 பயனாளிகளுக்கு

இவ்வுதவித்திட்டம் வழங்கப்பட்டுள்ளது. சுழட்சி முறையில் அங்கத்தவர்களுக்கு வட்டி இன்றி

வழங்கப்படும். இவ்வுதவி திட்டத்தின் மூலம் சுமார் 1000 அங்கத்தவர்கள் ஆறு ஆண்டுகளில்

பயன் பெறுவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இந்த ஆண்டு 127 ஏக்கரில் உணவு

உற்பத்தி மேட்கொள்ளப்பட்டுள்ளதுடன் பயன்படுத்தப்படாத காணிகள்

பயன்படுத்தப்பட்டுள்ளன,அத்துடன் கூலிக்கு செல்பவர்கள் தமது காணிகளில் உட்பத்தி

நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இவ் நடவடிக்கை அவர்களை தமது சொந்த காலில் நிற்க

வகை செய்கின்றது.

இத்திட்டத்திற்கான நிதி பங்களிப்பு விபரம் வருமாறு

V4U € 4000,-,

Go Fund Me € 730.97,

CSNHA € 7087,03

Wilde Gansen € 11818,-.

மொத்தம் € 23636,-

நெற்செய்கை திட்டம் RLF:

2009-ஆம் ஆண்டு போர் பாதிப்பின் மிகவும் வலிகளை சுமந்த மாவட்டங்களில் கிளிநொச்சி

மாவட்டமும் ஒன்றாக உள்ளது. இம்மாவட்டத்தில் அங்கம் வகிக்கும் சிக்கன கடனுதவு கூட்டுறவுச்

சங்கங்கள் நெற்செய்கை திட்டத்திற்கான உதவி கோரி திட்ட முன்மொழிவை 2018ஆம் ஆண்டு

கிளிநொச்சி மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தில்

விண்ணப்பித்திருந்தனர். அதன் பயனாக, முதல்கட்டமாக 2019ஆம் ஆண்டு 30அங்கத்தவர்களுக்கு

நெற்செய்கைக்கு € 3150.00 உதவி வழங்கப்பட்டது . தொடர்ந்து 2019ஆம் ஆண்டு

மேற்கொள்ளப்பட்ட கலை விழா நிகழ்வில் சேகரிக்கப்பட்ட நிதியில் இரண்டாம் கட்டமாக 70

பயனாளிகளுக்கு € 7500.00 வழங்கப்பட்டது. இன் நிதியானது சுழற்சி முறையில் காலபோக,

சிறுபோக செய்கை என இரு செய்கைகளுக்கும் பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி , கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேச

செயலர் பிரிவுக்கு உட்பட்ட10 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இத்திட்டத்திற்கான நிதி பங்களிப்பு விபரம் வருமாறு

CSNHA 2019 € 3150.-

CSNHA 2020 € 7500.-

மொத்தம் € 10650,-

பெண்கள் வாழ்வாதார திட்டம் – வில்லடி, பூநகரி

பரமன்கிராய் வில்லடி கிராமத்தில், போரின் தாக்கத்தினால் பெண்கள் தலைமை தாங்கும்

குடும்பங்களைக் கொண்ட 18 பெண்கள், தாமாக ஒரு குழுவாக இணைந்து, தமக்குள்ள

சேமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, அச்சேமிப்பினை சிறு தொழில் முயற்சிக்கு கடனாக வழங்கி,

வருமானம் தரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் முயற்சியினை

மேம்படுத்தும் நோக்கில் CSNHA நிறுவனத்தின் முகாமைத்துவ அங்கத்தவர்கள் தாமாக முன்

வந்து வழங்கி நன்கொடையின் மூலம் € 508.- வழங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான நிதி பங்களிப்பு விபரம் வருமாறு

CSNHA ( Board members) € 375.-

CSNHA €1 33.-

மொத்தம் € 508,-

விவசாய திட்டம்: கனகராயன்குளம்

வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட

கனகராயன்குளம் கிராமத்தில் சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம் புனரமைப்புச்

செய்யப்பட்டு சங்கத்தில் அங்கத்தவர்களாக உள்ள 17 விவசாயிகளுக்கு நெற்செய்கைக்கு

உதவித்திட்டம் வழங்கப்பட்டது. நிதியானது CSNHA நிறுவனத்துக்கு மீள வழங்கப்பட

வேண்டியது என்ற பிரமானங்களின் கீழ் இத்திட்டம் வழங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான நிதி பங்களிப்பு விபரம் வருமாறு

CSNHA (Member) € 1000.-

CSNHA € 200.-

மொத்தம் €1200,-

Welcome 2021

CSNHA நிறுவனமானது வடக்கு கிழக்கில் வாழும் வறிய மாணவர்களின் கல்வித் தரத்தில்

அக்கறை செலுத்தும் முகமாக 2020ஆம் ஆண்டு v4u நிறுவனத்துடன் இணைந்து 20-21 என்ற

நிகழ்ச்சியை இணையத்தளத்தின் ஊடாக மேற்கொண்டது. இதன் மூலம் கிடைக்கின்ற

நிதியானது வறிய மாணவர்களின் கல்விச் சேவைக்கு பயன்படுத்தப்படும் என்ற நோக்கில்

மேற்கொள்ளப்பட்டது. இந்த வகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் € ,-

கிடைக்கப் பெற்றது.

இத்திட்டத்திற்கான நிதி பங்களிப்பு விபரம் வருமாறு

Ticket 2020 € 247.-

Donatie 2021 € 484,50

மொத்தம் € 732,25

திட்டத்திற்கான பயிற்சி நெறிகள்:

விவசாய திட்டத்திற்கான பயிற்சி நெறிகள் விவசாய திணைக்களத்துடன் இணைந்தும்,

கால்நடை வளர்ப்பிற்கான பயிற்சிகள் கால்நடை வளர்ப்போர் திணைக்களத்துடன்

இணைந்தும், மற்றும் முகாமைத்துவ பயிற்சிகளும் இவ்வாண்டு உரிய நேரங்களில்

வழங்கப்பட்டது.

2000 பனை விதைகள் நடும் திட்டம்

இவ் ஆண்டு இலண்டன் கிளி பீப்பிள் ( Kili people) அமைப்புடன் இணைந்து மல்லிகை தீவில்

எம்மால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒன்பது ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பால்

பண்ணையின் வேலிகளை பலப் படுத்தும் முகமாக 2000 பனை விதைகள் நடும் திட்டம்

மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் பலதரப்பட்ட அரச திணைக்களம் அதிகாரிகளும் கலந்து

கொண்டனர்.

மாட்டுப் பண்ணை திட்டம்:

இவ்வாண்டின் தொடர் நடவடிக்கையாக

 CO3 புல்லு நடப்பட்டுள்ளது

 கிணறு கட்டுமான பணி பூர்த்தி அடைந்துள்ளது

 களஞ்சிய அறை கட்டட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது

 மாட்டுத்தொழுவம் கட்டட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது

பண்ணையாளர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது

 31 ஆம் திகதி மார்ச் மாதம் மாட்டுப் பண்ணை திறந்து வைக்கப்படும்.

இத்திட்டத்தினை உரிய காலத்தில் மேற்கொள்வதற்கு எதிர்கொண்ட சிரமங்கள் வருமாறு:

 9 ஏக்கர் காணி உரிமம் பெறுவதில் தாமதம் தடைகளும்.

 காணியில் உள்ள காட்டு மரங்களை வெட்டுவதற்கான அனுமதி பெறுவதில்

தாமதங்கள்.

 வருடாவருடம் ஏற்படும் கடும் மழை வெள்ளம்.

 காட்டு யானைகளின் தாக்கம்.

 covid-19 மூலம் ஏற்பட்ட சட்ட விதிகள்.

 2020 இல் பசு மாடுகளுக்கு ஏற்பட்ட கொடிய நோய் தாக்கம்.

 சமாசம் எதிர்நோக்கிய நிதிப் பிரச்சனை (சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கங்கள்

இடம் நிதி பெறுவதில் ஏற்பட்ட சிரமம்).

தொடர் திட்டங்கள்:

தொடர் திட்டங்களாக மன்னார் நெற்செய்கை திட்டம், முல்லைத்தீவு சிறுதொழில் முயற்சி

திட்டம், வவுனியா பசு மாடு வளர்ப்பு திட்டம் , சிறுதானிய செய்கை திட்டம் ,கிளிநொச்சி

சுழற்சி கடன் திட்டம் முல்லைத்தீவு ஆடு வளர்ப்பு திட்டம் மற்றும் பழம் மரம், தென்னங்கன்று

வளர்ப்பு திட்டம் ஆகியன தொடர்ச்சியான கண்காணிப்பிலும் செயற்பாட்டிலும் FTCCS

மேற்கொண்டு வருகின்றது.

கண்காணிப்பு, மீள்ஆய்வு செயற்பாடுகள்:

இவ்வாண்டு எமது நடவடிக்கைகளை உடனுக்குடன் ஆராய்வதற்கும் கண்காணிப்பதற்குமான

செயற்பாடுகளை இணையவழி கலந்துரையாடல்கள் மூலம் வடமாகாண சிக்கன கடனுதவு

கூட்டுறவுச் சங்க, சம்மேளனம், மாவட்டங்களின் சமாசம், பயனாளிகள் என்ற வகையில்

அவர்களுடைய முன்னேற்றங்கள், பின்னடைவுகள், பின்னடைவுக்கான காரணங்கள், அப்

பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வு செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதற்காக,

ஒவ்வொரு புதன்கிழமையும்CSNHA/FTCCS நிறுவனத்துடன் இணைந்து கூட்டங்களை

நடாத்தி வருகின்றது.

அதுமட்டுமன்றி திட்டங்கள் சம்பந்தமாக எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடனுக்குடன்

பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் வாயிலாக இவ்வாண்டு திட்டங்கள்

சீரமைக்கப்பட்டும், திருத்தப்பட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வகையில் இந்த

ஆண்டு விவசாயத்திற்கு வழங்கப்பட்ட நிதி உதவியானது வட்டி பெறப்படாமல் சுழற்சிமுறை

பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமன்றி அவர்கள் காலப்போக்கில் தமது சொந்தக்காலில் தொழில் முயற்சிகளை

மேற்கொள்வதற்கு உதவும் வகையில் அவர்களால் மேற்கொள்ளப்படும் சேமிப்புக்கு எதிராக

எம்மால் நூறுவீதம் நிதி பங்களிப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பயன்பாடின்றி கிடந்த உற்பத்தி நிலங்களை இத்திட்டத்தின் மூலம் பயன்பாட்டிற்கு

கொண்டு வரப்பட்டு, கூலி தொழிலை நம்பி, நாளாந்த வருமானம் ஈட்டும்

தொழிலாளர்களுக்கு தமது சொந்தக் காணியில் உற்பத்தி முயற்சிகளை மேற்கொண்டு,

அவர்களின் சுய பொருளாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு

வருகின்றது.

திட்டச் செயற்பாடுகளை வெளிக்கொணர்தல்:

 இவ்வாண்டு நிறுவனத்தின் Website செயற்பாடானது பூரண படுத்தப்பட்டு

முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் முகநூலின் வழியாக எமது செயற்பாடுகள்

முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 மேலும் எமது செயற்பாடுகள் திரு ரியாஸ் அவர்களின் உதவியுடன்

தொலைக்காட்சி(RTV) வாயிலாகவும் ஒளிபரப்பப்பட்டது.

 இவ்வாண்டும் உரிய நேரத்தில் பொங்கல் வாழ்த்து அட்டையானது, எமது

செயற்பாட்டு அறிக்கையுடன் அங்கத்தவர்களுக்கு